போப் பிரான்சிஸ் காலமானதாக பகிரப்படும் போலிச்செய்தி

போப் பிரான்சிஸ் காலமானதாக 'vatican news' X தளத்தில் வெளியாகிதை போன்று பகிரப்படும் புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் ஆகும்.
by Anonymous |
பிப்ரவரி 24, 2025

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையும் வத்திக்கான் நகரின் தலைவருமான போப் பிரான்சிஸ் காலமானதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
சில நாட்களுக்கு முன்பு போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையிலேயே அவர் காலமானதாக செய்தி பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்ததில், அவர் காலமானதாக எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் “அவர் இரட்டை நிமோனியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறார்” என்றும் “தீவிர சிகிச்சையில் உள்ளார்” என்றும் இன்று வெளியாகிய சில சர்வதேச செய்திகளில் குறிப்பிட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் இது குறித்து ஆராய்ந்ததில், நைஜீரியாவை சேர்ந்த செய்தி தளமான “The Nigerian Voice” செய்தி தளம் வெளியிட்டிருந்த உண்மைச்சரிப்பார்ப்பு கட்டுரை ஒன்றை அவதானிக்க முடிந்தது. அக் கட்டுரையில் போப் பிரான்சிஸ் காலமானதாக பகிரப்படும் செய்தி போலியானது என்றும் ‘vatican news’ X தளத்தில் வெளியாகிதை போன்று பகிரப்படும் புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஆகவே, கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையும் வத்திக்கான் நகரின் தலைவருமான போப் பிரான்சிஸ் காலமானதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.