பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுகின்றனவா?

இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை
by Anonymous |
ஜனவரி 2, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
•https://www.facebook.com/share/p/18Z2vVN7xM/
• https://www.facebook.com/share/p/1M7ofHekDQ/
அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகளிடம் FactSeeker வினவிய போது, இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்ததில், அப் புகைப்படம் கடந்த ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி சுற்றுலா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும், அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு வகையாக பகிரப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
• https://johnnyjet.com/another-smart-reason-to-take-a-photo-of-your-checked-luggage/
இதன் மூலம் இத் தகவல் உண்மையல்ல என்பதை உறுதிப்படுத்த கூடியதாக இருந்தது.
மேலும், இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயணபைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
• https://www.facebook.com/share/p/12DjJQDpHdv/
ஆகவே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.