கஜகஸ்தான் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தார்களா?
இவ் விமானத்தில் பயணம் செய்த 69 பேரில் 38 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
by Anonymous |
டிசம்பர் 27, 2024
Azerbaijan Airlines க்கு சொந்தமான Embraer ERJ-190 பயணிகள் விமானம் J2-8243 கஜகஸ்தானின் Aktau நகருக்கு அருகில் நேற்று முன் தினம் (25) விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து குறித்து இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
https://www.virakesari.lk/article/202173
https://www.itnnews.lk/ta/2024/12/26/651929/
நேற்று (26) லங்காதீப பத்திரிகை “விமானத்தை சுட்டு வீழ்த்திய பறவைக் கூட்டம் : 72 பேர் பலி” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 25 ஆம் திகதி, கஜகஸ்தானின் அக்டாவு அருகே, அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer ERJ-190 விமானம் விபத்துக்குள்ளானதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவ் விபத்தில் இருந்து எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் விமானத்தில் 67 பயணிகளும், 5 பணியாளர்களும் மொத்தமாக 72 பேர் இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இச் செய்தியானது பிரான்ஸ் செய்தி நிறுவனத்திடமிருந்து (AFP) எடுக்கப்பட்ட செய்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்காதீப இணையத்தளத்தில் பின்வருமாறு செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்து பிரான்ஸ் செய்தி நிறுவனம் எவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது என்பதை ஆராய்ந்ததில், இவ் விமானத்தில் பயணம் செய்த 67 பேரில் 38 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
https://x.com/AFP/status/1871881074826960931
https://x.com/AFP/status/1871964126311821360
இவ் விபத்து குறித்து குழப்பங்கள் எழுந்துள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
Azerbaijan Airlines க்கு சொந்தமான Embraer ERJ-190 பயணிகள் விமானம் J2-8243, டிசம்பர் 25 ஆம் திகதியன்று Baku-யிலிருந்து Grozny-க்கு பறந்து கொண்டிருந்தது. கடும் மூடுபனி காரணமாக Grozny-யில் தரையிறங்க முடியாததால், விமானம் முதலில் Mahachkala மற்றும் பின்னர் Aktau-வுக்கு திருப்பப்பட்டது. Aktau-விலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அந்நாட்டு நேரப்படி காலை 11:30 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்துக்கான காரணங்களாக பறவைகள் கூட்டத்தின் மீது விமானம் மோதியதாகவும் விமானத்தின் ஒட்சிசன் சிலிண்டர் வெடித்தாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அஜர்பைஜான் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் பிரதமர் அலி அசாடோவின் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கசகஸ்தான் அரசாங்கமும் தனி குழு அமைத்து, விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.
கீழே விழுந்து விபத்துக்குளாகிய விமானம் சென்ற பாதையை Flightradar இணையதளம் வெளியிட்டுள்ளது.
https://www.flightradar24.com/data/flights/j28243#3879c26d
கஜகஸ்தான் அரசாங்கத்தின் தகவலின் அடிப்படையில், Azerbaijan Airlines (AZAL) Embraer ERJ-190 விமானத்தில் 69 பேர் பயணம் செய்தனர், இதில் 5 விமான பணியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
பயணிகள் விவரம்:
* 42 அஜர்பைஜானி குடிமக்கள்
* 16 ரஷ்யர்கள்
* 6 கசாக் குடிமக்கள்
* 3 கிர்கிஸ்தான் குடிமக்கள்
* 2 அடையாளம் காணப்படாத பெண்கள்
இந்த தகவலானது கஜகஸ்தான் ஊடமொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகும், அவர்கள் அஜர்பைஜானி, ரஷ்ய மற்றும் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் தப்பிய 29 பேரில் 27 பேர் மங்கிஸ்டாவ் பிராந்திய பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்யுள்ளனர் என்றும் 2 குழந்தைகள் உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் Azerbaijan’s Report செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் J2-8243 விமானத்தில் பயணித்த 67 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்புடைய தகவல்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறியலாம்.
https://x.com/azalofficial/status/1871851282371088774
விபத்திற்கு முன் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் எடுத்த காணொளிகள் மற்றும் விபத்தின் பொது எடுக்கப்பட்ட காணொளிகள் என்பன சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
https://www.instagram.com/reel/DD_60XGIyNI
அஜர்பைஜான் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:
https://fhn.gov.az/en/information/information-of-mess-press-service-video-photo-fbdd8478
FactSeeker இத் தகவல்களை கஜகஸ்தான், அஜர்பைஜான், ரஷ்ய செய்தி இணையதளங்கள் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களை மூலமாக கொண்டும், குறுக்கு சோதனை செய்தும் உறுதிப்படுத்துகிறது.