வலுசக்தி அமைச்சர் பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தியென மஹிந்த தேசப்பிரிய கூறியதாக போலிச்செய்தி
பாராளுமன்ற இணையதளத்தில் எம்.பி.க்கள் பட்டியலில் குமார் ஜெயக்கொடியின் தகவல்களை சரிபார்த்தபோது, அவரது கல்வித் தகுதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை
by Anonymous |
டிசம்பர் 16, 2024
வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ குமார ஜயக்கொடி பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்திர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன.
இது தொடர்பான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில்,
” வலுசக்தி அமைச்சர் திரு.குமார ஜயக்கொடி தன்னை பொறியியலாளர் என்று பொய்யாக காட்டிக் கொள்வதாக சமூக வலைதளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும், திரு.குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் வழங்கிய தகவல்களில் தாம் பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்திர்” என குறிப்பிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
வானொலி அலைவரிசையுடனான கலந்துரையாடலொன்றில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் “சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தியின் பிரகாரம் அமைச்சர் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக குற்றம் சுமத்துவது முறையானதல்ல” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்திகளுக்கான இணைப்புகள் கீழே உள்ளன.
https://janahanda.site/#/news/9
https://sinhala-themorningtelegraph.com/?p=4617
https://newsweb.lk/archives/34102
இந்த விடயம் தொடர்பில் FactSeeker ஆராய்ந்து பார்த்த போது, மஹிந்த தேசப்பிரிய பங்குபற்றிய அண்மைய வானொலி கலந்துரையாடல்கள் தொடர்பில் கண்டறிய முடிந்தது.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி, Neth வானொலி சேவையில் ஒளிபரப்பான ̒ Balumgala̕ நிகழ்ச்சிக்கான தொலைபேசி நேர்காணலில், அவர் ஒரு குறிப்பிட்ட அமைச்சரைப் பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிந்தது,
https://youtu.be/Sj-8cwmNr-o?t=394
அதன்போது, அமைச்சர் ஒருவர் தன்னை பொறியியலாளர் என்று கூறினாலும் அவர் பொறியியலாளர் அல்ல. ஆனால், பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தியாக பாராளுமன்றத்தில் தனது தகவல்களை அவர் வழங்கியுள்ளதாக அந்த நிகழ்ச்சியில் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் அந்த விமர்சனனத்தில் எந்த இடத்திலும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
ஆகவே மஹிந்த தேசப்பிரிய கூறும் காரணி குமார் ஜெயக்கொடி பற்றியதா என்பதை அறிய, பாராளுமன்ற இணையதளத்தில் எம்.பி.க்கள் பட்டியலில் குமார் ஜெயக்கொடியின் தகவல்களை சரிபார்த்தபோது, அவரது கல்வித் தகுதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது தொழில் பொறியியலாளர் என்று பட்டியலிடப்பட்டது.
அதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் இது குறித்து வினவியபோது, அவர் மேற்கண்ட பதிவுகளில் கூறியது போன்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.
இதன்படி, வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ குமார ஜயக்கொடி பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் பொய்யானவை என FactSeeker உறுதிப்படுத்தியுள்ளது.