மர்ம விலங்கைக் கண்டதாக பகிரப்படும் AI காணொளி
இக் காணொளி 99% செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை அறிய முடிந்தது.
by Anonymous |
நவம்பர் 19, 2024
“மாத்தளை லகேகல பிரதேசவாசிகள் மர்ம விலங்கைக் கண்டதாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த விலங்கை முதலில் பார்த்தவர் மாத்தளையை சேர்ந்த லத்தீஃப் ஹனிஃபா என்ற நபரே என அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
• https://www.facebook.com/reel/1619900855306829/?mibextid=6AJuK9&s=chYV2B&fs=e
இக் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இக் காணொளி பல்வேறு நாடுகளிலும் பகிரப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. மேலும், இது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஒன்றை கண்டறிய முடியவில்லை.
இந்த காணொளியை அவதானித்ததில், இக் காணொளியில் உள்ள விலங்குகளின் முகங்கள் தெளிவாக சித்தரிக்கப்படவில்லை. சில சமயங்களில் அக் கருப்பு விலங்கின் கால்கள் இரண்டாகவும் சில சமயங்களில் மூன்றாகவும் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. மேலும், இக் காணொளியில் உள்ள மனிதர்களின் முகம் சிதைவுற்று காணப்படுகிறது.
மேலும், இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளியா என ஆராய்ந்ததில், இது 99% செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை அறிய முடிந்தது.
ஆகவே, “மாத்தளை லகேகல பிரதேசவாசிகள் மர்ம விலங்கைக் கண்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி AI காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.