பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் நினைவுப்பரிசு முத்திரைகள்
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் கொண்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரைகள் என்பதையும் அவை நினைவு பரிசாக அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகும்.
by Anonymous |
அக்டோபர் 10, 2024
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்த செய்திகள் முக்கிய ஊடகங்களில் வெளியாகிருந்தாலும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சயை ஏற்ப்படுத்தியுள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பில் ஆராய்த்தில், பிரதமர் அலுவலகத்தின் உத்தியயோகபூர்வ இணையதளத்தில் இது குறித்த செய்தி வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும் பிரதமர் அம் முத்திரைகளை பெற்று கொள்ளும் புகைப்படங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும், இது தொடர்பில் அஞ்சல் திணைக்களம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் உலக அஞ்சல் தினம் மற்றும் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரை வகையைச் சேர்ந்தவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக, அஞ்சல் திணைக்களத்தின் சிறப்பு நிகழ்வுகளின் போது பிரதம அதிதிகளுக்கு தனிப்பயனாக்க முத்திரைகளை நினைவுப் பரிசாக வழங்குவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த முத்திரைகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப்படவில்லை என்றும், தபால் திணைக்களத்தின் அன்பளிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உலக அஞ்சல் தினம் மற்றும் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட தற்போதைய பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் கொண்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரைகள் என்பதையும் அவை நினைவு பரிசாக அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் FactSeekers உறுதிப்படுத்துகிறது.