டிஎஸ் சேனாநாயக்க இளம்பருவ ரணில் விக்கிரமசிங்கவை தூக்கி வைத்திருப்பதாகக் கூறி பரவும் புகைப்படம் தவறானது!

235

“டிஎஸ் சேனாநாயக்க இளம்பருவ ரணிலுடன்” என்ற தலைப்பில் மிகவும் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மூலம் – VOICE OF DEMOCRACY

இந்த செய்தி தொடர்பான எமது ஆய்வின் போது, ​​அந்த படத்தில் டி.எஸ்.சேனாநாயக்க, இளம்பருவ ருக்மன் சேனாநாயக்கவையே தூக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

மூலம் – https://cutt.ly/SENagNT

“போத்தலே வாலாஉவவில் 68 ஆண்டுகளுக்குப் பிறகு டி.எஸ். சந்திப்பு” என்ற தலைப்பில் 21 அக்டோபர் 2018 அன்று சிலுமின இணையதளத்தில் மேலே உள்ள புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

கட்டுரை – https://cutt.ly/DEB5mrH

சேனாநாயக்க குடும்பத்தின் வரலாறு குறித்த சிறப்புக் கட்டுரையில், “டி.எஸ். தனது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். ருக்மன் அவரது கைகளில் இருக்கிறார். தேவிந்த டிராக்டரில் இருக்கிறார். கிராமத்திலுள்ள குழந்தைகள் சூழ்ந்து நிற்கிறார்கள்” என்ற வாசகத்தோடு இந்த புகைப்படம் உள்ளது.

எனவே, மேலே உள்ள புகைப்படத்தில் திரு. டி.எஸ். சேனாநாயக்க அவர்கள் கைகளில் ஏந்தியிருப்பது இளம்பருவ ரணில் விக்கிரமசிங்கவை அல்ல, இளம்பருவ ருக்மன் சேனாநாயக்கவை என்பது தெளிவாகிறது.

Previous articleඩී.එස්. සේනානායක විසින් කුඩා රනිල් වික්‍රමසිංහ අතැතිව සිටින බව හැඟවෙන නොමඟයවන සුළු ඡායාරූපයක්
Next articleA misleading photo of D.S Senanayake stating that he is holding young Ranil Wickremesinghe