தொடர் மழை காரணமாக ராவணன் நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்திருப்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை!

222

“ராவணன் நீர்வீழ்ச்சி திடீரென கடுமையாக பெருக்கெடுத்தது” என்ற தலைப்பில் தொடர்ச்சியான புகைப்படங்கள் கோசிப் லங்கா நியூஸ் இணையதளத்தில் 1 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது.

குறிப்பிட்ட தலைப்புடனான செய்திகள்

“பெய்த மழையால், இதுவரை அமைதியாக இருந்த நீர்வீழ்ச்சிகள் மீண்டும் செயல்படுகின்றன. இந்த புகைப்படங்கள் ராவணன் நீர்வீழ்ச்சியின் விளைவைக் காட்டுகின்றன.”

மூலம் – https://cutt.ly/MECe80I

இந்த செய்தி குறித்து நாம் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வின்படி, புகைப்படங்கள் பிரசன்ன பத்மசிறி என்பவரால் 2020 இல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

டெய்லி மிரர் வலைத்தளம் நவம்பர் 6, 2020 அன்று “ராவணன் நீர்வீழ்ச்சியின் நிறம் மாறிவிட்டது” என்ற தலைப்பில் இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

எனவே, சமீபத்திய மழை காரணமாக ராவண நீர்வீழ்ச்சி “மீண்டும் செயல்படுகின்றன” என்று கோஸிப் லங்கா நியூஸ் இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அதே புகைப்படங்கள் என்பது நிரூபணமானது.

Previous articleஒரு டோஸில் கொரோனாவை குணமாக்கும் ஒரு மாத்திரையை அமெரிக்கா கண்டுபிடித்ததாக பரவும் செய்தி தவறானது!
Next articleඩී.එස්. සේනානායක විසින් කුඩා රනිල් වික්‍රමසිංහ අතැතිව සිටින බව හැඟවෙන නොමඟයවන සුළු ඡායාරූපයක්