ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கான இரகசிய குறியீடு இலக்கத்தை தலைகீழாக / பின்னோக்கி பயன்படுத்துவதன் மூலம் அவசர காலத்தில் பொலிசாரை உதவிக்கு அழைக்க முடியுமா?

122

“ATM இயந்திர அறையில் இருக்கும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு அச்சுறுத்தப்படும் சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டால், உங்கள் இரகசிய கடவு இலக்கத்தை பின்னோக்கி உள்ளிடவும். உதாரணமாக,

(*) உங்கள் கடவுச்சொல் 1234 என்றால், அதற்கு பதிலாக 4321 ஐ உள்ளிடவும்.

அவ்வாறு செய்யும் பொழுது, பெறுவதற்கு கோரப்பட்ட தொகையில் பாதியை மட்டுமே இயந்திரம் தருகிறது, அத்தோடு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தானியங்கி தொலைபேசி அழைப்பும் அனுப்பப்படுகிறது.

*இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இந்த வசதி உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.”

என கூறும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த செய்தி தொடர்பான எமது இந்த பதிவு 20 நவம்பர் 2013 முதல் புழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.

மூலம் 

மேலும், இந்த பதிவு இலங்கை பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இலச்சினையை கொண்டிருப்பதோடு, அதன் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதாகக் கூறுகிறது, ஆனால் அது ஒருபோதும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படவில்லை.

 

இது தொடர்பில் இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு.நிஹால் தல்துவவை தொடர்பு கொண்டபோது இது போலியான பதிவு என்று அவர் குறிப்பிட்டார்.

அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதுபோன்ற தானியங்கி தொலைபேசி அழைப்பை செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்ப இணைப்பு இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே, ATM இயந்திர அறையில் இருக்கும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட அச்சுறுத்தப்படும் போது, இரகசிய குறியீடு இலக்கத்தை தலைகீழாக / பின்னோக்கி பயன்படுத்துவதன் மூலம் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தானியங்கி தொலைபேசி அழைப்பு அனுப்பப்படும் என பரவும் செய்தி போலியானதாகும்.

Previous articleஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) வாட்சப் குழு பற்றிய போலியான எச்சரிக்கை
Next articleCan the police be contacted by entering the ATM pin backwards during an emergency?