18 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசி வழங்கப்படும் என்று பரவும் செய்திகள் தவறானவை.

135

“தயவுசெய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அத்தோடு தடுப்பூசி போடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கவும்.

18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

செப்டம்பர் 04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் விஹாரமஹாதேவி பூங்காவில் 18-30 வயதுடையவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த வாய்ப்பை இழக்காதீர்கள்.” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி வழங்கும் திட்டம் இலங்கை இராணுவத்தால் செயல்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் இச்செய்தியின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்வதற்காக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவை தொடர்பு கொண்டபோது, இதுவரை அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி போலியானது என்றும் கூறினார்.

எனவே, “செப்டம்பர் 04 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் விஹாரமஹாதேவி பூங்காவில் 18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது” என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது.

Previous articleலால் காந்த கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது
Next articleMisleading news that the popular singer, Athula Adhikari is under treatment