ரில்வின் சில்வாவின் பெயரில் பரப்பப்படுகின்ற செய்திகள் போலியானவை!

59
“பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இப்ராஹீமின் வழக்கறிஞரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவித்து, ஜி.எஸ்.பி+ ஐப் பாதுகாக்கவும் என ரில்வின் அரசாங்கத்திடம் கூறுகிறார்” என்ற தலைப்பில் ‘லங்கா’ பத்திரிகைக்கு ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா வழங்கிய அறிக்கையாக சமூக ஊடகங்களில் ஒரு பத்திரிகை கட்டுரையொன்று பகிரப்பட்டு வருகின்றது.
மூலம் – https://bit.ly/3iKxkej
மேற்கண்ட செய்தி குறித்து ‘லங்கா’ பத்திரிகையின் ஆசிரியர் பத்ம மஞ்சுளவிடம் வினவியபோது, அத்தகையதொரு கட்டுரை தங்களது பத்திரிகையில் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், ஜே.வி.பி ஊடக ஒருங்கிணைப்பாளர் உபுல் ரஞ்சனிடம் இது குறித்து வினவியபோது, ​​ரில்வின் சில்வா அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றும், மேற்கண்ட தலைப்புடன் கூடிய கட்டுரை போலியாக உருவாக்கப்பட்ட பதிவு என்றும் கூறினார்.
எனவே, ஹிஸ்புல்லாவின் விடுதலை குறித்து ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா லங்கா பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கை என பரவும் செய்தி போலியானது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
Previous articleFake news about farmers in Vakarai cultivating and harvesting dhal
Next articleDisinformation and Misinformation Trends – May 2021