இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் நிலை எனும் தலைப்பில் பரவும் காணொளி தவறானது!

151

இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் மக்கள் வீதிகளில் மயங்கி விழுவதாக காணொளியொன்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

கடந்த வருடம் மே மாதம் 7ஆம் திகதி அதிகாலை இந்தியாவின் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் LG பொலிமர்ஸ் எனும் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததன் காரணமாக அதனை சுவாசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் மயங்கி விழுந்தபோது எடுக்கப்பட்ட காணொளியே இவ்வாறு தவறான தலைப்பில் பரவி வருகின்றமை எமது ஆய்வில் தெரியவந்தது.

மேலும் இந்தியாவை தளமாகக் கொண்ட சில உண்மை தரவு பரிசோதனை நிறுவனங்களும் இக்காணொளி தவறான தலைப்பில் மீண்டும் பரப்பப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. (https://www.boomlive.in/…/covid-19-second-wave-visuals…)

எனவே இந்தியாவில் மக்கள் வீதிகளில் மயங்கி விழுவதாக பரவும் இக் காணொளியானது, தற்போது இந்தியாவின் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தை வெளிப்படுத்தும் காணொளி இல்லை என்பது நிரூபணமாகிறது.

Previous articleA video circulating regarding the current situation of the 2nd wave of Covid virus in India
Next articleව්‍යාජ පුවත් සහ වෛරී කථාව: ‘පශ්චාත්-සත්‍ය යුගය’