தேசிய மக்கள் சக்தி அதன் அரசியல் கட்சியை விரிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சியின் பல அரசியல் கட்சிகளின் தலைமைகளது ஒப்புதலோடு ஒரு பாரிய திட்டத்தை அறிவித்திருப்பதாகவும், அத்துடன் தற்போதைய ஆளும் கட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த விரக்தியிலும் ஏமாற்றத்திலும், வரவிருக்கும் மாகாண சபை தேர்தலில் சவால் விடும் பொருட்டும் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
பத்திரிகை செய்தியாக வடிவமைக்கப்பட்ட இச்செய்தி குறித்த விசாரணையில், எந்தவொரு இலங்கை பத்திரிகைகளிலும் இதுபோன்ற செய்தி வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி புதிய கட்சி உருவாக்கத்தில் இணைவதாக பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த கட்சிகளிடம் விசாரித்தபோது, அத்தகைய ஆயத்தங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பதிலளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகச் செயலாளர் ரஞ்சித் குமார, ஜே.வி.பியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் உபுல் ரஞ்சன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பிரிவினர் ஆகியோரும் இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்பதையும், ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க எந்த கலந்துரையாடலோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர்.