குருவிட்டவில் உள்ள கெமுனு வொட்ச் படையணி தலைமையகத்தில் புத்தர் சிலை தீ வைத்து அழிக்கப்பட்டதாக புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. குருவிட்ட கெமுனு வொட்ச் படையணி தலைமையகத்தில் இருந்த குறித்த புத்தரின் உருவம் வருடாந்த வெசக் மற்றும் பொசன் மண்டலங்களில் காண்பிக்கப்படுவதற்காக நாணல் மற்றும் காகிதக் கூழைப் பயன்படுத்தி 2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும் என இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கண்ட உருவம் பல ஆண்டுகளாக வெசாக் மண்டலங்களில் பயன்படுத்தப்பட்டதாலும், இது மேலும் காட்சிக்கு வைக்க தகுதியற்றதாகிவிட்டது. எனவேதான் மதிப்பிற்குரிய சாஸ்திரபதி பண்டித தொம்பவல விஜேஞான தேரரின் ஆலோசனையுடன் பாரம்பரிய முறைப்படி இச்சிலை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.