இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் நிதியுதவி அளிக்கும் அஷோக ஹந்தகமவின் ஐந்து படங்களுக்கான 5 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் நடிகைகளை தேடுவதாக ஒரு போலி செய்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அஷோக ஹந்தகம, அவரது தனிப்பட்ட அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்:
“அஷோக ஹந்தகமவின் படங்களுக்காக நடிகர்களை தேடும் ஒரு போலி வணிக முயற்சி எனும் செய்தி பற்றி எனது ரசிகர் ஒருவர் தகவலை எனக்கு அனுப்பினார். இந்த நாட்களில் நான் திரைப்படங்களைத் தயாரிக்கவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், இருப்பினும், தெரிந்த தொழில்முறை தொடர்புகள் மூலம் நடிகர்களைத் தேடுவேன்.”
மூலம் – https://bit.ly/3yp9BVH